குணசேகரனை ஷாக்கில் ஆழ்த்திய கிள்ளி வளவன்.. அடுத்த என்ன ஆகும்? எதிர்பார்க்க வைக்கும் எதிர்நீச்சல்!
எதிர்நீச்சல் சீரியல் சொத்து பிரச்சனை சூடு பிடிக்கும் நிலையில் குணசேகரனை தேடி கிள்ளி வளவன் வீட்டிற்கே வந்துவிட்டார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.
அப்பத்தா பட்டம்மாளின் 40% சொத்துக்களை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டார். இது குணசேகரனுக்கும் அவரது குடும்பத்துக்கும் பேரிடியாய் விழுந்தது. இதையடுத்து ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி குணசேகரன் குடும்பத்தைப் போலவே பார்வையாளர்களையும் துளைத்தெடுத்தது. இதையடுத்து ஜீவானந்தத்தை கொல்ல குணசேகரன், தனது தம்பி கதிரையும், முன்னாள் காவல்துறை அதிகாரி கிள்ளி வளவனையும் அனுப்பி வைத்தார். அவர்கள் நடத்திய தாக்குதலில் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி உயிரிழந்தார்.
பிளான் மிஸ் ஆகி ஜீவானந்தத்தின் மனைவி உயிரிழந்த நிலையில், அதற்குப் பின் குணசேகரனும், கதிரும், கிள்ளி வளவனிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். ஆனால் உங்களுக்காக எனது குழுவின் நபர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்தார்கள், அதனால் பேசியபடி பணத்தைத் தரும்படி பலமுறை ஃபோனில் எச்சரிக்கை விடுத்தார் கிள்ளி வளவன். ஆனால் குணசேகரனும், கதிரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதற்கிடையே இன்றைய எபிசோடில், குணசேகரன் வீட்டுக்கே வந்துவிட்டார் கிள்ளி வளவன். ’உங்களுக்கு வேலையாகனும்ன்னா என்ன பாக்க வருவீங்க, வேலை முடிஞ்சிட்டா அப்படியே கட் பண்ணிடுறது?’ என கோபமாகிறார். இதைக்கேட்ட குணசேகரனின் தாய், ‘யாருப்பா அது?’ என விசாரிக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த புரோமோ ரசிகர்களின் எதி்ற்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.