பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகல்?

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகல்?

தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாகப் பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரை தினசரி பார்ப்பதற்கொன்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பு கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் இந்தத் தொடரிலிருந்து விலகப்போவதாக அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் அவருக்கு விருது வழங்காததே இந்த விலகலுக்குக் காரணம் என்று பலராலும் கருத்துக் கூறப்பட்டது. ஆனாலும், இந்தக் கதாபாத்திரத்துக்கு அவரை விட்டால் பொருத்தமாக யாரும் கிடைக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சதீஷே தொடர்ந்து இந்தத் தொடரில் கோபியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ரித்திகா இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், ரித்திகா அந்தத் தொடரிலிருந்து விலகியதற்கான எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, அவர் அந்தத் தொடரிலிருந்து விலகியதற்கான எந்தக் காரணமும் இன்னமும் தெரியவில்லை. அமிர்தா கதாபாத்திரத்துக்கு பதில் அந்தத் தொடரில் அக்ஷிதா என்பவர் நடித்துக்கொண்டிருப்பதாக சின்னத்திரை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தொடரில் அக்ஷிதா நடிக்கும் காட்சிகள் இன்னமும் ஒளிபரப்பாகாத சூழ்நிலையில், கோபியாக நடிக்கும் சதீஷ் இந்தத் தொடரிலிருந்து ரித்திகா விலகியது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ரித்திகா, பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகி இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே நீண்ட நாட்கள் ஒளிபரப்பப்படும் என்பதால், அதில் நடிப்பவர்களும் அடிக்கடி மாற்றப்படுவது இயல்புதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com