ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றம்! பிக்பாஸ் அதிரடி!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்பொழுது 15 போட்டியாளர்கள் மாத்திரமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய ஏழு பேர் சிக்கியநிலையில். இதில் யார் வெளியேறுவார் என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தது.
அந்த வகையில் இந்த வாரம், கதிரவன், அசீம், தனலட்சுமி ஆகியோர் ஓரளவுக்கு நிறைய வாக்குகளை பெற்று, அடுத்தடுத்த நிலையில் சேஃப் சோனில் உள்ளதாக கூறப்பட்டது.

ராம், மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ஆகியோர் சமமான நிலையில் வாக்குகளை பெற்றுள்ளதாகவும், சில வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், இவர்கள் நால்வரில் யார் வெளியேறுவார் என்பது புரியாத புதிராக இருந்தது.
இந்த நிலையில் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் மணி தான் தற்போது குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார்கள் . இதில் ராபட் மாஸ்டர் அவரை தான் பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றியுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக் உள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது