பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் குழந்தைப் பெற்று உள்ளனர்.
அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தனத்துக்கு திடீரென மார்பகப் புற்றுநோய் வந்தது. இதையடுத்து, மற்ற மூன்று மருமகள்களும் ஒன்றாக சேர்ந்து கூட்டுத் திட்டம் போட்டு திருச்சிக்கு அழைத்துச் சென்று தனத்துக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த விஷயம் தற்போது கதிருக்கு மட்டும் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள மற்ற நபர்களுக்கும் தெரியவரும்போது என்ன ஆகும் என்ற பரபரப்பில் இந்தக் கதை களம் சென்று கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தனம் தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே உள்ளார். இதனால் வீட்டின் கிரகப்பிரவேசத்தை வேகவேகமாக வைத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புது வீட்டுக்குச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீண்டும் ஜீவா இணைய வேண்டும் என்று தனம் ஆசைப்படுகிறார்.
இந்த நிலையில், ஜீவாவுக்கும் அவரது மாமனாருக்கும் தொழில் முதலீடு விஷயம் ஒன்றில் பிரச்னை ஏற்பட, திடீரென ஜீவாவுக்கும், ஜனார்த்தனனின் இரண்டாவது மருமகன் பிரசாந்துக்கும் சண்டை வருகிறது. இதனைப் பார்த்த மூர்த்தி ஓடி சென்று ஜீவாவுக்காக சண்டை போடுவது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஜீவா குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து விடுவார் என்று தங்கள் தரப்பு கருத்தைக் கூறி வருகிறார்கள். கதைக்களம் எப்படி நகரும் என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.