கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக்பாஸில் அஸீம்க்கு ரெட் கார்ட் அளிப்பாரா கமல்ஹாசன்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஐய் டிவியில் நடிகர் கமல் ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் சீசன் 6 நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் தொடங்கி பல நாட்களை கடந்துவிட்ட இந்த சீசனானது மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பரபரப்பாகஓடிக்கொண்டு  இருக்கிறது.நிகழ்ச்சியானது அசீம் தனலட்சுமி விக்ரமன் என பரபரப்பான போட்டியாளர்களால் எப்போதும் விறு விறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 

அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும், சண்டைகளும் தான்.

சின்னத்திரை நடிகரான அசீம் இந்த சீசனில் பங்கேற்றதில்  இருந்தேஅனைவரிடமும் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார். வார இறுதி நாட்களில்பாலாஜி முருகதாஸை போலவே சைலன்ட் ஆகி எஸ்கேப் ஆகி வருகிறார். ஆனால், பாலா கூட நேர்மையான விஷயத்துக்குத் தான் சண்டை போடுவார் என்றும் அசீம் மிகவும் அராஜகம் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Aseem
Aseem

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே ரூல்ஸை மீறி விளையாடுவது, அடுத்தவர்களை மதிக்காமல் மோசமாக நடத்துவது,  ஆர்க்யூமெண்ட் செய்வது, தினம் தோறும் சண்டை போடுவது என பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறார். தொடர்ந்து ஃபவுல் கேம் மும் ஆடி வருகிறார் அசீம் என்கிற குற்றச்சாட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கைகலப்பு இல்லாமல் இத்தனை சீசன்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், இந்த சீசன் கைகலப்பு வரை சென்று விட்டது பலரையும்அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அசீம் தான் மட்டுமே கேம் விளையாட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவுட் ஆகி அசிங்கமும்  பட்டார். அமுதவாணன், கதிர் இடையே போட்டி நடைபெற்ற  நிலையில், இடையே புகுந்தஅசீம் சண்டையை பெரிதாக்கி  விட்டார்.

ஏற்கனவே ஒரு முறை கமல் அசீமின் அராஜக செயலை கண்டித்து எச்சரிக்கை  பண்ணி இருந்தார். சகப் போட்டியாளர்கள்  அனைவரிடமிருந்தும் ரெட் கார்ட்பெற்றிருந்தார். கமல்ஹாசனே இன்னொரு முறை இப்படி செய்தால், நானே ரெட்கார்டு கொடுப்பேன் என்றும் எச்சரித்து இருந்தார்.

ஆனால், அதையெல்லாம் மீறி இந்த வாரம் அமுதவாணன் தாக்கியதாக  அசீம் மீது புகார் எழுந்துள்ள நிலையில், பிக் பாஸ்  ரசிகர்கள் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com