JGM’ திரைப்படம்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிறது அதிரடி ஆக்‌ஷன் படம்!

JGM’ திரைப்படம்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிறது அதிரடி ஆக்‌ஷன் படம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகிறது பிரமாண்ட ஆக்‌ஷன் டிராமாவான் JGM' படம்!

மும்பையில் நடந்த விழாவில் இயக்குனர் பூரி ஜெகன்னாத் தனது அடுத்த திரைப்படமான "JGM"  குறித்து அறிவித்தார். அதில் அவர் பேசும்போது "எங்கள் அடுத்த திரைப்படமான 'JGM'  ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் டிராமாவாக இருக்கும்.

இது பன்மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம். அந்த வகையில் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். அவரது திரைப் பயணத்தில் JGM' படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.'' என்று தெரிவித்தார்.

படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., "JGM  படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. மிகவும் சவாலான திரைக்கதை கொண்ட இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும்  தொடும்.  ரசிகர்களிடம் பெரும் தக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். நான் இதுவரை செய்திராத புதுமையான பாத்திரம்'' என்று தெரிவித்தார்.

இப்படத்துக்கு ஏப்ரலில் துவங்கி உலகின் பல இடங்களில் படப்பிடிப்பு  நடைபெறவுள்ளதாம். இதையடுத்து அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் JGM படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com