ரோலக்ஸுக்கு கிடைத்த ரோலக்ஸ் பரிசு!

ரோலக்ஸுக்கு கிடைத்த ரோலக்ஸ் பரிசு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ஜூன் 3-ம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் தாறுமாறு ஹிட் ஆகி, வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த பலருக்கும் கமல்ஹாசன் சிறப்பு பரிசுகள் அளித்துள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர்! இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 03-ம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த 'லெக்ஸஸ்' கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்தார். இந்த காரின் விலை சுமார் 85 லட்சம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் 'ரோலக்ஸ்' என்ற பெயருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்  சூர்யாவுக்கு கமல் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்துள்ளார்.

மேலும் 'விக்ரம்' படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை கமல் பரிசளித்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா தனக்கு பரிசளிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வைரலாகியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com