53 வயதில் அசத்தல் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய நடிகை!
’எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தின் செண்பகத்தை மறந்து விட்டீர்களா? மாட்டீர்கள். தழையத் தழைய பட்டுப் பாவாடை தாவணி அணிந்து அந்தப் பாடலில் வளைய வருவாரே, அவரை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழில் தாயம் ஒண்ணு, சர்க்கரைப் பந்தல் உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களில் நடித்து விட்டு ஹிந்தி நாடகங்களில் நடிக்கச் சென்று விட்டார் நிஷாந்தி. அவரது நிஜப் பெயர் சாந்தி.
அக்கா மங்கா பானு , பானு ப்ரியாவாகி தென்னிந்திய சினிமாத்துறையை 80 களில் கலக்கிக் கொண்டிருக்க பிறகு தங்கைக்கும் சினிமா ஆசை பிடித்துக் கொள்ள அக்காவைப் பின்பற்றி சாந்தி ப்ரியாவாகி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
ஆனால், அக்கா அளவுக்கு பிரபல்யத்தை எட்டும் முன்பே தங்கைக்கு இந்தி சினிமா உலகின் பிரபல இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான வி.சாந்தாராமின் கொள்ளுப் பேரன் சித்தார்த் ரேவுடன் காதலாகி அது திருமணத்தில் முடிந்தது.
நிஷாந்தி என்பது தமிழ் சினிமாவுக்காக கங்கை அமரன் சூட்டிய பெயர். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் சாந்தி ப்ரியா அப்பெயரைப் பயன்படுத்தவில்லை.
திருமணமாகி 4 வருடங்களில் கணவர் இறந்து விட தற்போது தன் மகன்களுடன் மும்பையில் வசித்துவருகிறார் சாந்தி ப்ரியா.
அதெல்லாம் சரி நடுவில் இத்தனை வருட இடைவெளிக்குப் பின் சாந்தி ப்ரியா தனது 53 வயதில் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தக் காரணமென்ன? என்கிறீர்களா?
சாந்தி ப்ரியா சமீபத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ‘தாராவி பேங்க்’ எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறாராம். அந்த வெப் சீரீஸ் ப்ரொமோஷனுக்காகவோ அல்லது அடுத்தடுத்து திரைப்படம் மற்றும் வெப் சீரீஸ்களில் நடிக்கும் எண்ணத்துடனோ அவர் அந்த ஃபோட்டோ ஷூட்டை நடத்தி இருக்கலாம் என்பதாக ஒரு தகவல்.
சமந்தா நடிப்பில் தற்போது தெலுங்கில் சாகுந்தலம் என்றொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
80 களில் பிறந்தவர்களுக்கு சகுந்தலை என்றால் அது சாந்தி ப்ரியா தான். அன்றைய தூர்தர்ஷன் ஒளிபரப்பில் நடிகர் முகேஷ் கன்னா தயாரித்து
விஸ்வாமித்திரர் வேடமேற்று நடித்திருந்த தொடரில் சகுந்தலையாக அறிமுகமானது இதே சாந்தி ப்ரியா. அப்போது மேனகை யார் என்கிறீர்களா? அது வேறு யாரும் இல்லை. சாந்தி ப்ரியாவின் அக்கா பானு ப்ரியாவே தான்.
53 வயதிலும் இளமை குறையாதவராகவே தோன்றுகிறார் சாந்தி ப்ரியா.
வெல்கம் பேக் நிஷாந்தி!