‘ஆருயிர் ஐயப்பா’ ஆல்பம் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஆருயிர் ஐயப்பா’ ஆல்பம் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

மிழில் எத்தனையோ சுவாமி ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன. ஆனால், முதல் முறையாக மிகப் பிரம்மாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது, ‘ஆருயிர் ஐயப்பா’ ஆல்பம் பாடல். இந்தப் பாடல் ஆல்பத்தை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு, அதில் நடித்தும் இருக்கிறார். இவருடன் இணைந்து வசந்த் பாடலை எழுதியுள்ளார்.

போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் தரண் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் மற்றும் முத்துச்சிற்பி ஆகிய இருவரும் பாடலைப் பாடியுள்ளதோடு அதில் நடித்தும் உள்ளனர்.

பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, அதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு நடன இயக்குனர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். ஐயப்பனின் புகழ் பாடும் இந்த, ‘ஆருயிர் ஐயப்பா’ ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க காட்சி வடிவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஆல்பம், ஐயப்ப பக்தர்களை மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் நிச்சயம் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com