லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து வெங்கட்பிரபுவுடன் அடுத்த படம் கைக்கோர்க்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் மகன் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்துவந்ததார். சில குறும்படங்களையும் அவர் இயக்கினார்.
இந்த நிலையில் தமிழில் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தன் தாத்தா வழியில் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாவது பற்றி சஞ்சய் கூறியதாவது: ‘’லைகா நிறுவனத்திற்கு என் கதை பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தை இயக்குவதற்கு லைகா நிறுவனம் எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது. இப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிட, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.