
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படம் உண்மைக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக படத்தின் இயக்குனர் யு.அன்பு தெரிவித்துள்ளார்.
சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவருடைய புதிய படத்திற்கான பெயரை நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளின்போது வெளியிடப்பட்டது.
படைத்தலைவன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். வி ஜே காம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜகநாதன் பரமசிவம் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவில், இளையராஜா இசையில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் திரைக்கதையை பார்த்திபன் தேசிங்கு எழுதி உள்ளார். படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சுந்தர், முனீஸ் காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் யு.அன்பு தெரிவித்திருப்பது, விஜயகாந்த் படத்தில் என்ன இருக்குமோ அதை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை இது. இந்த படம் யானைக்கு மனிதர்க்கும் இடையேயான பாச போராட்டமாக இருக்கும். இது ஒரு சகோதர உறவைப் போன்றது. ஒடிசாவில் தற்போது படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. யானை சம்பந்தமான காட்சிகள் பாங்காக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அடுத்த கட்ட படபிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. படத்தில் கஸ்தூரிராஜாவினுடைய கதாபாத்திரம் முக்கியமான அங்கம். படைத் தலைவன் திரைப்படம் சிறந்த கதை கருவை உள்ளடக்கிய படமாக வெளிவரும் என்று தெரிவித்தார்.