ஜெயிலர் வில்லன் விநாயகன்
ஜெயிலர் வில்லன் விநாயகன்Vijay Kumar

"மனசிலாயோ" ஜெயிலரில் பட்டைய கிளப்பிய வர்மன்.. வெற்றி குறித்து நெகிழ்ச்சி!

Published on

ஜெயிலர் படத்தில் நடித்ததன் அனுபவம் குறித்து வில்லனாக நடித்த விநாயகன் மனம் திறந்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். படத்தில் மேலும் ஒரு மெருகு போல இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத்.

இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த நிலையில், ஜெயிலரின் வில்லனாக நடித்த விநாயகன் ஜெயிலர் பட அனுபவம் குறித்து பேசியுள்ளார். அட்டகாசமான வில்லனாக நடித்து வர்மன் கதாபாத்திரத்தில் அனைவரையும் வசீகரித்துள்ளார். தமிழும், மலையாளமும் கலந்த அவரின் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நெல்சனுக்கும், தயாரிப்பாளர் தயாநிதிமாறனுக்கு, ரஜினிகாந்திற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், வெளியில் செல்ல முடியாத அளவிற்கு இந்த வர்மன் கதாபாத்திரம் ஹிட்டாகியுள்ளதாகவும் பேசியுள்ளார். கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை இந்த அளவு வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com