நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக உள்ளார். சொந்த வாழ்க்கையில் பிரச்சினை, விவாகரத்து, சினிமாவில் அதிரடி ஐட்டம் டான்ஸ் என்று எப்போதுமே ஹாட் டாபிக் சமந்தாதான்.

இந்நிலையில் ‘யசோதா’, , குஷி உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது, சமந்தாவும் தமிழ், தெலுங்கு என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.பாலிவுட்டிலும் அக்ஷய் குமாருடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த சமந்தா,. சமீப காலங்களாக புதிதாக எந்த போட்டோ படேட்டும் போடவில்லை. இடையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமந்தாவின் முகத்தில் ஏற்பட்டுள்ள தோல் நோய் பிரச்சினையை சரிசெய்ய அவர் விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com