சாகுந்தலம்
சாகுந்தலம்

நடிகை சமந்தாவின் காவியக் காதல் திரைப்படம் 'சாகுந்தலம்'!

சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. புராணக் கதையான சாகுந்தலம் கதையைக் கொண்டு தழுவி எடுக்கப் பட்டுள்ள திரைப்படம் தான் சாகுந்தலம்.

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி,நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்சமந்தா.அதன் பிறகு சமந்தா யசோதா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது மயோசிஸ் என்கிற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இதையடுத்து, யசோதா படத்தின் ப்ரோமோனுக்காக பேட்டி அளித்த சமந்தா,மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், பல கஷ்டங்களை கடந்து இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் என உருக்கத்துடன் பேசி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார்.என்பது குறிப்பிடத்தக்கது.

sakunthalam
sakunthalam

இந்த நிலையில் இந்த சாகுந்தலம் திரை காவியத்தில் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார். இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில்,நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த சாகுந்தலம் திரை படம் 3டி யில் உருவாக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.. இப்படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com