தான் உருவக் கேலி செய்யப்பட்டதாக நடிகை சமீரா ரெட்டி பேச்சு !

சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி

தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை சமீரா ரெட்டி விமான நிலையத்தில் தான் உருவக் கேலி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி என்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் வர்ணம் ஆயிரம், அசல், பேட்டை, வெடி ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதன் பிறகு 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஹை வருதாவை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தை பிறந்த பிறகு காய்கறி வியாபாரி ஒருவர் உருவக் கேலி செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இது அன்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பது, சமீபத்தில் நான் விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கு விமான நிலைய பாதுகாவலர் ஒருவர் ஆதார் அட்டை பரிசோதித்து விட்டு உங்கள் எடை ரொம்ப மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். இதுவும் ஒரு வகையான உருவக் கேலி தான். ஒவ்வொருவரும் தனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் பிறர் பாதிக்கப்படுகிறார்களோ என்று சிறிது கூட எண்ணிப் பார்ப்பது கிடையாது.

திரைப்படம் மூலம் உருவான பிம்மத்தையே மக்கள் நிஜ வாழ்க்கையில் நடிகர், நடிகைகளிடம் எதிர்பார்க்கின்றனர். அதை எப்படி சாத்தியம். இது அவர்களுடைய அறியாமையினுடைய வெளிப்பாடு. ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவிற்கு அடுத்த வரை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மேலும் இன்று திரைத் துறையினர் என்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. அது திரைத்துறையினுடைய வளர்ச்சியே தவிர, முக்கிய தேவை கிடையாது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com