சினிமா செய்திகள்
தந்தையின் மரணத்தால் கலங்கிய அஜித்! நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல்!
நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று காலை இயற்கை எய்தினார். தற்போது அவருக்கு 85 வயதாகும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த நிலையில், உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுச் செய்தி அறிந்ததும், தமிழக முதல்வர், கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து அஜித் தந்தையின் உடல், சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், அஜித் வீட்டிற்கு சென்ற நிலையில், நடிகர் விஜய் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று, தந்தையை இழந்த அஜித்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிச் சென்றுள்ளார்.