இசையமைப்பாளர் சதிஷுக்கு சிஎம்ஏ விருது! 

இசையமைப்பாளர் சதிஷுக்கு சிஎம்ஏ விருது! 

-லதானந்த் 

 ரேடியோ மற்றும் மியூசிக் கிளெஃப் இசை விருதுகள் (சிஎம்ஏ) அமைப்பு, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருடனும், இசைக் குழுக்கள், இசை ஸ்பெக்ட்ரம் ஆகிய குழுக்களோடும் இணைந்து இசைத் துறையில் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் அளித்துவருகிறது. 

CMA விருதுகளின் இரண்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான இசை சாதனைகளுக்காக இசைக் கலைஞர்களை கௌரவித்தது. 

Regina Sunaina
Regina Sunaina

சுனைனா நடித்து வரும் திரில்லர் படமான   ‘ரெஜினா’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான சதீஷ் நாயருக்கு அவரது இசையமைப்பான  ‘வீணை ஒன்று’ என்ற கருவி இசை அமைப்புப் பதிப்புக்காக (Instrumental Version) விருது வழங்கப்பட்டது.

இந்த இசையமைப்பிற்கு உயிர் கொடுத்தவர் பழம்பெரும் கலைஞர் திரு. ராஜேஷ் வைத்யா. பாடலை எழுதியவர் மரபின் மைந்தன் முத்தையா என்பது குறிப்பிடத் தக்கது. 

*

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com