கோடிக்கணக்கில் பணமும் பாலிவுட் பகட்டும்!

மும்பை பர பர
கோடிக்கணக்கில் பணமும் பாலிவுட் பகட்டும்!

திருமண உடை என்றால் சும்மாவா?

திருமணத்திற்கு உடை எடுக்க பொதுவாக பல பெண்கள் செலவு செய்வார்கள். அதிலும் சினிமா ஹீரோயின்கள் என்றால் கேட்கவா வேண்டும்?

தங்களது திருமண உடைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த பாலிவுட் நடிகைகளின் விபரம் பின்வருமாறு;-

தற்சமயம் முதலிடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராய் ஆவார். 2007ஆம் ஆண்டிலேயே, தனது திருமணத்தில் மிக உயர்ந்த புடவை அணிந்த ஹீரோயின் இவரே. இவரது உடையின் விலை ரூ 75 லட்சம்.

இரண்டாவதாக நடிகை ஷில்பா ஷெட்டி – குந்த்ரா, ரூ 50 லட்சம்.

கரீனா கபூர் - கான்,   ரூ 50 லட்சம்

அனுஷ்கா சர்மா – விராட் கோஹ்லி,  ரூ 30 லட்சம்.

பிரியங்கா சோப்ரா – ஜோனாஸ், ரூ 17 லட்சம்.

சமீபத்தில் சித்தார்த் – மல்ஹோத்ரா, கியாரா அத்வானி திருமணம் நடைபெற்ற சமயம், ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட ஏழு சுற்றுகள் கொண்ட சிகப்பு நிற லெஹெங்காவை கியாரா அணிந்திருந்தார். இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

வெளியிட்ட பின் எந்த இடத்தினைப் பிடிக்கப்போகிறார் என்பது தெரியவரும்.

பணமிருக்கையில் பகட்டும் தேவைதான்.

நீல நிற வாட்ச்

ஸ்பை ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமாக உருவாக் கப்பட்ட பதான் படம், வெளிவந்த சில நாட்களிலேயே கோடி கோடியாக வசூலித்தது. இந்தியா முழுவதும் அதிக வசூல் செய்த பாலிவுட் படமென்று புதிய சாதனையை ஷாருக்கான் இப்படம் மூலம் படைத்துள்ளார்.

படம் தொடர்பான நிகழ்வுகளிலிலும், பதான் விளம்பரங்களைப் பற்றி தீபிகா படுகோனே பகிர்ந்துள்ள வீடியோவிலும், ஷாருக்கான் நீல நிற வாட்ச் அணிந்து காணப்பட்டார். இந்த வாட்ச்சின் புகைப்படங்களை, பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Audemars Piguet (Brand) என்கிற ஒரு பிராண்டின் கடிகாரமாகிய இதன் விலை சுமார் ரூ 4. 7 கோடி இருக்குமென கூறப்படுகிறது. இந்த வாட்ச்சின் விலையை வைத்து வாழ் நாள் முழுவதும் ஆடம்பரமாக வாழலாமென நெட்டிசன்கள் வேடிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.

பதான் பட வெற்றியைத் தொடர்ந்து ஜவான், டன்கி போன்ற படங்களில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாரா, கதாநாயகியாக நடித்து வரும் ஜவான் ஜுன் -2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி ’டன்கி’ படத்தை இயக்கிவருகிறார்.

கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த நீல நிற வாட்ச் அதுவும் ஷாருக்கான் கரங்களில் ஜொலிக்கிறது என்கிற விஷயம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com