இன்னும் கொஞ்சம் அழுத்தமான டிராகுலா படத்தில் நடிக்க ஆசை: ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்!

இன்னும் கொஞ்சம் அழுத்தமான டிராகுலா படத்தில் நடிக்க ஆசை: ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்!

ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் முழுக்க முழுக்க டிராகுலாவாகவே ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்

கிறிஸ் மெக்கேயின் வரவிருக்கும் திகில்-நகைச்சுவைத் திரைப்படமான ரென்ஃபீல்டில் நடிகர் நிக்கோலஸ் கேஜ் டிராகுலா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது முன்பே தெரிந்த செய்தி. இப்போது அதிலென்ன புதுசு என்கிறீர்களா?

புதுமை இருக்கிறதுதான். ஏற்கனவே டிராகுலாவாக நடிப்பில் பட்டையைக் கிளப்பக் கூடிய நிக்கோலஸ் கேஜ், இன்னும் அந்த கதாபாத்திரத்தை வெரைட்டியாக நடித்துப் பார்க்க ஆசைப்படுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் படத்தில் அவர் நடிக்கும் போது டிராகுலாவாகவே வாழ விரும்புகிறார் எனலாம். அதாவது ஒவ்வொரு வேடத்துக்கும் ஒரு ஆன்மா என்பது இருக்கும். அந்த ஆன்மா கெடாமல் நடித்தால் அந்த வேடத்துக்கு ஜீவன் கிடைத்து விடும். அது எந்தக் கதாபாத்திரமாக இருந்தால் தான் என்ன? அதற்கென்று ஒரு ஜீவன் இருக்கிறது. அது நடிப்பில் வெளிப்பட வேண்டும். அப்போது தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு நாம் நியாயம் செய்தவர்கள் ஆவோம். இதைத்தான் சொல்ல விரும்புகிறார் நிக்கோலஸ்.

அவரது கூற்றுப்படி, இன்னும் சிறப்பாக டிராகுலாவின் தனித்தன்மையை, அதன் ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடிய சிறந்த டிராகுலா படமொன்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக நிக்கோலஸ் தெரிவிக்கிறார்.

"உங்களுக்குத் தெரியும், டிராகுலாவின் கண்களில் மின்னும் ரத்த வெறியில் முக்கியமான சில தருணங்களை நீங்கள் பார்க்க முடிந்தால் தான் அந்த கதாபாத்திரத்தின் ஆன்மாவை நீங்கள் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட டிராகுலாவாக ஒரு திரைப்படம் முழுவதிலும் நடிப்பதற்கு ஒரு நாள் நான் முயற்சி செய்ய விரும்பலாம். - என்று கூறிய நிக்கோலஸ்

அதற்காகத்தான் அவர் கிறிஸ் மெக்கேயின் திரைப்படத்தில் தனக்கு சவால் விடும் விதத்தில் அமைத்த இந்த டிராகுலா கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவும், டிராகுலாவாக நடிப்பதில் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஸனாக இருப்பது ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லீ என்றும் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com