என்டம்மா பாடல் சர்ச்சை!

பாலிவூட் பூமராங்
என்டம்மா பாடல் சர்ச்சை!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்து Eid பண்டிகை தினத்தன்று வெளி வரவிருக்கும் இந்திப்படம் ‘கிஸி கா பாயி! கிஸி கி ஜான்!’ (Kisi Ka Bhai! Kisi Ki Jaan!). இந்த படத்தில்தான் வேட்டி டான்ஸ் காட்சி வருகின்றது.

ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் 9 நாட்கள் அமோகமாக நடைபெறும் பூக்களின் திருவிழா ‘பதுக்கம்மா’ விழா என அழைக்கப்படுகிறது.

இதைக் குறிக்கும் பாடல் ஒன்று 28 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் நடித்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இதுபற்றி சல்மான்கானிடம், வெங்கடேஷ் தெரிவிக்க,

“கிஸிகா பாயி! கிஸி கி ஜான்!” இந்திப் படத்தில் ‘எண்டம்மா’ வாக வந்துவிட்டது. கால்களினால் தாளம் போட வைக்கும்படியான இப்பாடல் காட்சியில், சல்மான்கான், வெங்கடேஷ் நடிக-நடிகைகள் மற்றும் அநேக நடனக் கலைஞர்கள் ஆடியள்ளனர்.

சென்ற ஆண்டு நடைபெற்ற ‘பதுக்கம்மா’ விழா சமயம், இந்தப் பாடல் காட்சி ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு வெளியாகிய ‘வீரம்’ தமிழ்ப் படத்தைத் தழுவி இந்த இந்திப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘பதுக்கம்மா’ பாடலை கம்போஸ் செய்த ரவி பாஸ்ரூர் ஒரு சிறந்த இசை இயக்குனர் ஆவார்.

அட, என்னதான் புதுசா சொல்ல வறீங்கன்னு நீங்க கேட்பது கேட்கிறது.

பட்டு வேட்டி, சட்டை அங்கவஸ்திரமென அமர்க்களமான காஸ்ட்யூமில் சல்மான்கான் குழுவினர் ஆடும் பாடல் காட்சிக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் நடன அசைவுகள் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றனர்.

தவிர, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், “இந்நடனம் தென்னிந்திய கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலுள்ளது. இது லுங்கி (Lungi) இல்லை. வேட்டி என்று தெரிவித்து டிவிட்டரில் அப்பாடலையும் பகிர்ந்துள்ளார்.

(சர்ச்சை, சக்ஸஸ் ஆகலாம்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com