பனையூரில் கூடிய ரசிகர் கூட்டம்! ரசிகர்கள் முன் விஜய் சொன்ன விஷயம் இதுதான்!

பனையூரில் கூடிய ரசிகர் கூட்டம்! ரசிகர்கள் முன் விஜய் சொன்ன விஷயம் இதுதான்!

எந்தவொரு ரசிகன் என்றாலும் அவன் தன் தலைவனை பார்க்கும்போது அவனுக்குள் ஏதோவரு ஒரு ஆர்வமும், சிலிர்ப்பும் ஏற்படும். அந்த வகையில் ஒரு பெரும் ரசிகப்பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய்.

தற்போது விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் தலைவனின் திரைப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது தளபதி விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

சில வருடங்களாகவே தலைவனை காணாத ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்ததால், ரசிகர்கள் பலரும் ஆவலாக பனையூர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த சந்திப்பில், ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அமர்க்களப்படுத்தியும், ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிக்காட்டினார் தளபதி விஜய்.

விஜய் பங்குபெற்ற இந்த ரசிகர் மன்ற கூட்டம் இரண்டு மணிநேரமாக நடந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கியமான இரு விஷயங்களையும் கூறினாராம். அது என்னவென்றால் முதலில் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து முக்கியத்துவம் கொடுங்கள் என்றும், அடுத்தது அவரது படங்கள் வெளியாகும் போது பால் அபிஷேகம் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளாராம் விஜய்.

இந்த சந்திப்பு முடிந்து தளபதி விஜய் கிளம்பும்போது, ரசிகர்களுக்காக, 'வாரிசு' திரைப்படத்தின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு அழகான ஸ்டெப் ஒன்றையும் போட்டு அசத்தியுள்ளாராம் விஜய்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com