ஃபர்ஹானா காட்சிகள் ரத்து! தியேட்டர் எடுத்த திடீர் முடிவு!

ஃபர்ஹானா காட்சிகள் ரத்து! தியேட்டர் எடுத்த திடீர் முடிவு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும், அவருடன் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஃபர்ஹானா.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்தப்படத்தை, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் நேற்று வெளியானது. முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியான போதே, இந்த படத்தை வெளியிடக்கூடாது. தடை செய்ய வேண்டும் என சர்ச்சைகளும் கிளம்பிய நிலையில், இப்படம் எந்த மதத்தினரையும், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதல்ல என தயாரிப்பாளர் தரப்பிலும் கூறியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று உலகமெங்கும் இப்படம் வெளியான நிலையில், பல எதிர்ப்புகளும் கிளம்பியதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும், இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுது, திருவாரூரில் தியேட்டரில், இன்று திரையிடப்படுவதாக இருந்த பர்ஹானா திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com