கோட்சேயை சந்திக்கிறார் காந்தி!

மும்பை பர பர
கோட்சேயை சந்திக்கிறார் காந்தி!

காந்தி – கோட்சே ஒரு யுத்தம் திரைப்படம் ஜனவரி 26 அன்று வெளியாகிறது. திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். இவரது மகள் தனிஷா சந்தோஷி மற்றும் அனுஜ் சைனி இதை தாயாரித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரசூல் பூக்குட்டி ஒலிவடிவமைப்பு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

’’ சுதந்திர வேள்வி கொழுந்துவிட்டெரியும் காலத்தில் கதை ஆரம்பமாகிறது. காந்தியின் முன்னெடுப்பும், அதன் எதிர்திசையில் இந்துத்துவமும் போராக மூள்கின்றன. நிஜ சம்பவமான – காந்தியை நோக்கி கோட்சேவின் துப்பாக்கி வெடிக்கிறது. ஆனால், நல்வாய்ப்பாக அத்தாக்குதலில் காந்தி உயிர் பிழைக்கிறார் என்று ‘’கற்பனைக் கதை’’ தொடங்குகிறது.

சிறையிலிருக்கும் கோட்சேயை காந்தி நேரில் சந்திக்கையில், அவர் அதிர்ச்சி அடைகிறார். இரு வேறு சித்தாந்தவாதிகள் கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர். காந்திக்கான சவால்கள் சிறைக்கு வெளியேயும் காத்திருக்கின்றன.

காந்தி – கோட்சே இடையிலான யுத்தமும், சுதந்திர இந்தியாவில் காந்தி எதிர்கொள்ளும் புதிரான பல சவால்களுமே இப்படத்தின் கதையாகும்.

தீபக் அந்தோணி காந்தியாகவும், சின்மை மண்ட்லேகர் கோட்சேயாகவும் நடித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் சந்தோஷி பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கும் திரைப்படம் ‘காந்தி – கோட்சே’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com