
இன்று நடிகர் கார்த்திக்கின் மகனும் பழம்பெறும் நடிகர் முத்துராமனின் பெயரனுமான கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனிற்க்கும் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் , திரையுலகினர் சிலரும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காதல் திருமண ஜோடியின் அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகின் நெருக்கமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் சென்றுள்ளனர்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கௌதம் கார்த்திக். இவர் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் பற்றிக்கொண்டது என செய்திகள் பரவியது. அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது திருமண அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரின் அழகிய ப்ரிவெட்டிங் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ரசிகர்களிடையே உண்டாக்கினர்.
இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.