கவுகாத்தி துர்கா கோயிலில் அமலா பால்: வைரல் புகைப்படங்கள்!

கவுகாத்தி துர்கா கோயிலில் அமலா பால்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை அமலாபால் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

வழக்கமாக ஹீரோக்களுடன் டூயட் பாடி நடிப்பதை தவிர்த்துவிட்டு சேலஞ்சிங் ஆன ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறார்.

இந்நிலையில் அமலா பால் இப்போது ஆன்மீகவாதியாக மாறி வட இந்தியக் கோயில்களில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய, அவை வைரலாகியுள்ளன.

தமிழ்ப்பட இயக்குனரான ஏ.எல்.விஜய்யுடன் திருமண முறிவு, பஞ்ச்சபி பாடகருடனான நிச்சயதார்த்த முறிவு போன்ற சொந்த வாழ்வின் சில சோகங்களால் அவர் கவனம் ஆன்மீகம் பக்கம் திரும்பியுள்ளதாக சொல்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான அமலாபாலுக்கு அதன்பிறகு வருகின்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாகவே அமைகிறது. இருப்பினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில். வட இந்தியாவில் கவுகாத்தியில் உள்ள பிரபல துர்கா கோவிலுக்கு வழிபடச் சென்று அமலாபால் அங்கு பக்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com