ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கிய இந்திய ஆவண குறும்படம்!

ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கிய இந்திய ஆவண குறும்படம்!

ராஜமௌலி இயக்கிய 'RRR' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்திய ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றதையடுத்து, திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 'நாட்டு நாட்டு' பாடல் 'best original song' என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான 'RRR' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் மட்டுமல்லாது, இப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இந்தியாவிற்கே பெருமையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு விருதும் இந்திய சினிமாவிற்கு கிடைத்துள்ளது.

'The Elephant Whisperers' எனும் ஆவண குறும்படம் 'best documentary short film' எனும் பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

41 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்பட ஆவணப்படம், தமிழ்நாட்டு இயற்கையின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், ரகு என்ற அனாதை குட்டி யானைக்கும், அதை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாத்து வளர்ப்பதற்காக, தங்கள் உயிரை அர்ப்பணிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி என்ற தம்பதியினருக்கும் இடையே உள்ள தற்காலிக பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 'The Elephant Whisperers' ஆவண குறும்படத்தை Kartiki Gonsalves இயக்கிய நிலையில், இந்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையும் சேர்த்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com