'அயலான்' ஏலியனுக்கு இத்தனை கோடி செலவா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!
2015ல் வெளியான 'இன்று நேற்று நாளை' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல வருடங்களுக்குப் பின் அப்படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கும் 2வது படம்தான் 'அயலான்'. அறிவியல் புனைகதை படமாக உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தயாரிப்பில் இருந்துவரும் 'அயலான்' திரைப்படம், ஒரு மனிதனுக்கும் வேற்றுகிரகவாசிக்கும் இடையிலான தனித்துவமான உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை கோடபாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ள நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருவாகி வரும் நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கோடபாடி ஜே ராஜேஷ் பேசுகையில், ஏலியன் பொம்மையில் ஒரு எதார்த்தம் இருக்கவேண்டும் என்பதற்காக, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏலியனுக்கு 2 கோடி முதலீடு செய்யவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் 'அயலான்' படம் 4,500+ VFX காட்சிகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, 'அவதார்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த நிறுவனமே VFX செய்துள்ளதாக கூறினார். 'அயலான்' படம் 'இ.டி.'யை போன்று இருக்கலாம் என ஊகிக்கப்படும் நிலையில், அதுகுறித்து அவர் கூறும்போது, ''அயலான்' படத்தை 'ஈ.டி'யுடன் ஒப்பிட முடியாது. இதன் கதைக்களம் முற்றிலும் வேறுபட்டது'. எனவும் அவர் கூறியுள்ளார்.