கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’!

படக்குழுவினர்
படக்குழுவினர்

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றிப் படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில் 'ரகு தாத்தா' 

‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் ‘ரகு தாத்தா’. ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து கூறும் பொழுது போக்குச் சித்திரமாக இது உருவாகிறது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, 'பேமிலி மேன்' வலைத் தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் வெளியாக இருக்கும் விறுவிறுப்பான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  

ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில் கே.ஜி.எஃப்-2, காந்தாரா வெற்றி படங்களை கொடுத்துள்ளது.  அதன் தொடர்ச்சியாக தமது அடுத்த படைப்பான ரகு தாத்தாவை அறிவித்துள்ளனர். இப்படமானது, நாயகியை மையமாக கொண்ட கதை மட்டுமின்றி, நகைச்சுவை அம்சமும் கொண்டது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

அமைதியுடன் கூர் மதி கொண்டு, கொள்கையில் உறுதியுடன், தேவையெனில் புயலாக மாறும் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை வெளியீட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது:  

'ரகு தாத்தா’ நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும்.

ரகு தாத்தா
ரகு தாத்தா

நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள  அனைவரையும் ரசித்துச் சிரிக்க வைக்கும் படி எடுத்திருக்கிறோம். இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால் தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி.” 

M.S.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், 'ஜெய் பீம்' புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T.S.சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகிறது ‘ரகு தாத்தா.’ 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com