ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

#BREAKING லால் சலாமில் 'ரஜினிகாந்த்' ! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் முதல் மகளான ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஐஸ்வர்யா - ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா - ரஜினிகாந்த்

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டது. இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடிங் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று இன்னும் சற்று நேரத்தில் நடைப்பெற உள்ளது.

இந்த படத்தின் பூஜையில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு " என் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் நான் கெஸ்ட் ரோல் மட்டுமே செய்கிறேன்...என தனது வழக்கமான பாணியில் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

ஐஸ்வர்யா - ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா - ரஜினிகாந்த்

இன்று லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாகவும் செய்தி வெளியாகி வருகிறது.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாலும் அதிலும் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாலும் ரசிகர்களிடையே படத்துக்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து ஏற்கெனவே சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதுமே குறிப்பிடத்தக்கது. லைக்கா, ரஜினி காந்த், எ.ஆர். ரஹ்மான் போன்ற நட்சத்திர கூட்டணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com