'பிக் பேங் தியரி' 2 ஆவது எபிசோடில் மாதுரி தீட்சித்துக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு லீகல் நோட்டிஸ்!

'பிக் பேங் தியரி' 2 ஆவது எபிசோடில் மாதுரி தீட்சித்துக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு லீகல் நோட்டிஸ்!

நடிகர் மாதுரி தீக்ஷித்துக்கு எதிராக "இழிவான வார்த்தையை" பயன்படுத்தியதாகக் கூறி, "பிக் பேங் தியரி" சீசன் 2 வின் முதல் எபிசோடை நீக்கக் கோரி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லீகல் நோட்டீஸில், அரசியல் ஆய்வாளரான மிதுன் விஜய் குமார், தொடரில் , குணால் நய்யார் நடித்த ராஜ் கூத்ரப்பள்ளி கதாபாத்திரம் மற்றும் ஷெல்டன் கூப்பராக நடித்துள்ள ஜிம் பார்சன்ஸ் ஆகியோர் இருவரும் பேசுகையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்ஷித்தை ஒப்பிடுவது மாதிரியான காட்சியொன்று சீசன் 2 வின் முதல் எபிசோடில் வருகிறது. அது மாதுரி தீக்ஷித் மீது முன்வைக்கப்படும் கமெண்ட் தனிநபர் தாக்குதலாக மட்டுமின்றி அவதூறானதாகவும் இருக்கின்றது. எனவே அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்குமாறு அவர் நெட்ஃபிளிக்ஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை நெட்ஃபிளிக்ஸ் இந்த வேண்டுகோளை நிராகரித்தால் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிப்பதாகக் கருதி அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அதனடிப்படையில் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியில், ஷெல்டன் கூப்பர் ஐஸ்வர்யா ராயை ஏழைகளின் மாதுரி தீக்ஷித் என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, ராஜ் கூத்ரப்பள்ளி, "ஐஸ்வர்யா ராய் ஒரு தேவதை, அவரோடு ஒப்பிடுகையில், மாதுரி தீக்ஷித் ஒரு தொழுநோயாளி பாலியல் தொழிலாளி" என்று பதிலளித்தார்.

மேற்கண்ட கதாபாத்திரங்களின் கருத்துகள் அவமரியாதையானவை மட்டுமல்ல அவதூறானவையும் கூட என்று பெட்டிஷனர் குமார் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிப்பது போன்றிருக்கும் இந்த எபிசோடை அகற்ற வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் Netflix ஐக் கேட்டுக் கொண்டார். மும்பையில் உள்ள நெட்பிளிக்ஸ் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.

நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் தங்களது தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், டாக்குமெண்டரிகள் மற்றுமுள்ள இன்னபிற அனைத்து வெளியீடுகளுக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்றாக வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பின் அவற்றை நீக்குவதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் நெட்ஃப்ளிக்ஸின் பொறுப்பு தான். அவர்களது சேவைகள்

இடம்பெறும் சமூகங்களின் கலாச்சார விழுமியங்களை மதித்து அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புகார்கள் இருப்பின் அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.இதை உறுதிப்படுத்தவே தான் லீகஸ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாதுரி தீக்ஷித் இந்தியில் எவ்வளவு புகழ் மிக்க நடிகை?! அவரைப் பற்றி அப்படியொரு இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது, என்று குமார் ஒரு அறிக்கையில் கூறினார்.

"பிக் பேங் தியரி", 2007 இல் முதல் முறையாகத் திரையிடப்பட்டது, மேலும் 12 சீசன் ஓட்டத்திற்குப் பிறகு 2019 இல் முடிந்தது. நிகழ்ச்சியின் அனைத்து 12 சீசன்களும் Netflix இல் கிடைக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com