அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லைகா நிறுவனம்!
தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் போனவர் அருள்நிதி. இவரது நடிப்பில், 'மௌனகுரு', 'தகராறு', 'டிமான்டி காலனி', 'தேஜாவு', 'டைரி' என பெரும்பாலும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று வருகின்றன.
இந்நிலையில், இவர் தற்போது லைகா நிறுவன தயாரிப்பில், பாரதிராஜாவுடன் முதன் முறையாக இணைந்து படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
'எங்களின் #Production24 படத்தினுடைய தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பிப்ரவரி 16ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகும்' என்று நேற்று ட்விட்டரில் லைகா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இன்று Production#24 படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அருள்நிதி மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கும் இப்படத்தின் பெயர் 'திருவின் குரல்' என்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை ஹாரிஸ் பிரபு எழுதி இயக்கியுள்ளார். விரைவில் அருள்நிதியின் மாறுபட்ட கதாபாத்திரத்தை இதில் பார்ககலாம் என்று நம்பலாம்.