மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்: திரையுலகம் இரங்கல்!

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்: திரையுலகம் இரங்கல்!

பிரபல மலையாளத் திரையுலக நடிகர் நெடுமுடி வேணு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி காலமானார்.

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு, தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2′ திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். 73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார்.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 10) அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் நெடுமுடி வேணு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com