நடிகர் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை புதுப்பித்து இருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு தமிழ் திரை உலகின் உச்சபட்ச காமெடி நட்சத்திரமாக உள்ளவர். இந்த நிலையில் அவருடைய திடீர் அரசியல் பிரவேசம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. என்ன தான் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்தாலும் அரசியலில் தோற்றால் சகலமும் பின்னடைவு சந்திக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு போல் நடிகர் வடிவேலுவின் நிலை மாறியது.
இதன் தொடர்ச்சியாக திரைத் துறையின் வாய்ப்புகள் குறை தொடங்கியது. இதனால் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். அதே நேரம் கிடைக்கக்கூடிய ஒரு சில படங்களும் வடிவேலுக்கு ஏற்ற கதைகளாக அமையவில்லை.இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த வடிவேலுவின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இதுவரை சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருந்த வடிவேலு முதல் முறையாக அழுக வைத்து விட்டார் என்ற விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து எழத் தொடங்கியது. இந்த நிலையில் வடிவேலு இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் கைப்பற்றி உள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் வடிவேலு, தற்போது தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் வடிவேலு நடிப்பில் தயாராகி உள்ள சந்திரமுகி 2 செப்டம்பர் வெளியாக உள்ளது. அதே நேரம் நடிகர் வடிவேலு காமெடி நடிகர் என்பதை தாண்டி தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்ய காத்திருக்கிறார்களாம்.