'துணிவு' பட ப்ரமோஷனில் கெட்ட வார்த்தை பேசிய மஞ்சு வாரியார்! வைரல் வீடியோ!
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 'துணிவு', 'வாரிசு' திரைப்படம் வருகின்ற 11ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், 'துணிவு' பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியார் கலந்துகொண்டு பேசக்கூடாத கெட்டவார்த்தையை பேசியதையடுத்து, அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
'துணிவு' படத்தில் அஜித்தின் டீம் மேட்டாக நடித்திருப்பவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். 1994ல் சினிமாவில் அறிமுகமாகிய இவர் 1999 வரை தொடர்ந்து பல ஹிட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இதையடுத்து பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த மஞ்சு வாரியார் மீண்டும், 'How Old Are You?' என்ற மலையாள படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தொடர்ந்து நடித்து வரும் மஞ்சுவாரியார் தமிழில் தனுஷின் 'அசுரன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி, தற்போது பட ப்ரமோஷன் வேலைகளில் இப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், மஞ்சு வாரியார் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'துணிவு' பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியார் இருவரும் அதில் கலந்துகொண்டனர்.
அப்போது, 'துணிவு' படத்தில் அஜித் பேசும் ஒரு டயலாக்கை பேசிக்காட்டுமாரு தொகுப்பாளர் கேட்க, அதற்கு நடிகை மஞ்சு வாரியாரும், 'துணிவு' படத்தில் அஜித் பீப் சத்தத்தின் பின்னணியில் பேசும் கெட்ட வார்த்தை டயலாக்கை பேசிக் காட்டி, அந்த இடத்தில் பீப் போடுங்க என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் பட ப்ரமோஷனாக இருந்தாலும், இப்படி பொதுமக்கள் முன்னிலையில் ஓப்பனாக இவ்வாறு பேசியதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதுசம்பந்தமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.