வாரிசும் துணிவும் எந்தெந்த நாட்களில் சிறப்புக் காட்சி? இங்கே க்ளிக் செய்யவும்!

வாரிசும் துணிவும் எந்தெந்த நாட்களில் சிறப்புக் காட்சி? இங்கே க்ளிக் செய்யவும்!

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் நடித்த படங்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகி கணிசமான கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பண்டிகை நாளில் அல்லாமல் சாதாரண நாட்களில் வெளியாகும் சாதாரண படங்களுக்கு இத்தகைய கவனம் கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. ரஜினி படங்களுக்கு இது போன்ற கவனங்கள் கிடைப்பதுண்டு.

அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் நேற்று அதிகாலை வெளியானது. இரவு முழுக்க ரசிகர்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடந்தன. முன்னதாக, இரண்டு படங்களுக்கும் நாளை முதல் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியில்லை என்று முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது 13 தேதியிலிருந்து தொடங்கி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஆனால், நேற்றும் இன்றும் அதிகாலைக் காட்சிகளை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 18 தேதிகளில் வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. நேற்று வரை அனுமதியில்லை என்று மறுத்துவிட்டு, திடீரென்று அனுமதியளித்தது ஏன் என்று தெரியவில்லை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று 12-ம் தேதி , 13-ம் தேதி மற்றும் ஜனவரி 18-ம் தேதி ஆகிய தேதிகளில் மட்டுமே வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு படங்களுமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைந்துவிடும் என்று விநியோகஸ்தர்களின் அச்சப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவு ஆறுதலை தந்திருக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com