சுடச்சுட வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் புகைப்படம்!

சுடச்சுட வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் புகைப்படம்!

அமரர் கல்கியின் நாவலை தழுவி லைக்கா நிறுவனம் சார்பில் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

உலகளவில் வெளியான திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் நாவலுக்கு மக்களிடையே எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.

உலக அளவில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பட வேலையில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இப்படத்திற்கான வேலைகள் முடிந்து 2023 ஏப்ரல் 28ஆம் தேதி படமும் வெளியாகும் எனவும் தகவல் அறியப்படுகிறது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடையே இரண்டாம் பாகத்தில் காட்சிகள் எப்படி எப்படி எல்லாம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வரும் வேளையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் குந்தவை வருகின்ற ஒரு காட்சியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com