பவுடர் திரைப்படம்
பவுடர் திரைப்படம்

பவுடர் திரைப்படம் ;ஒரு இரவில் நடக்கும் கதை!

நாயகன் நிகில் முருகன் டைரக்டர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களை தொடர்ந்து பிரபலமான சினிமா மக்கள் தொடர்பாளர் (public relation officer -PRO) ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். நிகில் முருகன் - இந்த பெயரை தமிழ் சினிமா ரசிகர்கள், போஸ்டர்களிலும், டைட்டில்களிலும் பார்த்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் பிடித்த சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.

இவர் சினிமா செய்தியாளர்களுக்கும், சினிமாத் துறையினருக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல் படுகிறார்.   

நாயகன் நிகில் முருகன்
நாயகன் நிகில் முருகன்

 சினிமா  மக்கள் தொடர்பாளராக கடந்த இருபதைந்து ஆண்டுகளாக பணியாற்றும் இவர் தற்சமயம் பவுடர் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

காவல் துறை அதிகாரியாக நிகில் நடிக்கும் பவுடர் படத்தின் ட்ரைலர் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கிறது. இப்படத்தின் போலீஸ் வேடத்திற்கு நிகில் இயல்பாக பொருந்தி போகிறார்.             

பவுடர் படக்குழுவினர்
பவுடர் படக்குழுவினர்

இந்த படத்தின் கதை ஒரு இரவில் நடக்கிறது. இப்படத்தை பார்க்கும் போது நமது கடந்த கால நினைவுகள் வந்து போவதை தவிர்க்க இயலாது என்கிறார் இயக்குனர் விஜயஸ்ரீஜி. இவர் தாதா 87 படத்தை இயக்கியவர். தற்சமயம் மோகன் இயக்கும் ஹாரா படத்தையும் இயக்கி வருகிறார்.       

ஒரு மக்கள் தொடர்பாளராக பல்வேறு சினிமாகாரர்களின் மனங்களின் இடம் பிடித்த நிகில் ஒரு நடிகராக மக்கள் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com