ஆஸ்கருக்கு செல்லும் ராக்கெட்ரி!

ஆஸ்கருக்கு செல்லும் ராக்கெட்ரி!

ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் திரைப்படம் கடந்த 2022 ம் ஆண்டு  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவன் இயக்கி, நடித்துள்ள இந்த திரைப்படம் நம்பி என்ற இஸ்ரோ  விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சமபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணன்  அதிகார வர்கத்தின் சூழ்சியால் தேச துரோக வழக்கில் சிக்க வைக்கப் பட்டார். பல்வேறு இன்னல்களை அனுபவித்த நம்பி சட்ட ரீதியாக போராடி நிரபராதி என நிரூபித்து விடுதலை ஆனார். இந்த கருத்தை மையமாக வைத்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் திரைப்படம் கேன்ஸ் விழாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இதற்கு மகுடம் வைத்தாற்போல் இந்த படம் ஆஸ்கர்க்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் கனடா, பிரான்ஸ், ஜார்ஜியா உட்பட பல்வேறு நாடுகளில் படமாக்கபட்டுள்ளது. மாதவனுடன் சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார். சிறந்த விஞ்ஞானியான நம்பிக்கு கிடைத்த அவமானதிற்கு பரிகாரம் செய்வதை போல ஆஸ்கர் விருதுக்கு ராக்கெட்ரி படம் சென்றுள்ளதாக எண்ண தோன்றுகிறது.                ஆஸ்கர் கிடைக்க வாழ்த்துக்கள் மாதவன் சார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com