கண்ணீர் விட்டு அழுத சமந்தா! 'சாகுந்தலம்' பட விழாவில் நடந்த சம்பவம்!

கண்ணீர் விட்டு அழுத சமந்தா! 'சாகுந்தலம்' பட விழாவில் நடந்த சம்பவம்!

பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது 'சாகுந்தலம்' பட விழாவின் போது இயக்குநர் குணசேகர் சமந்தாதான் உண்மையான ஹீரோ என கூறியதை கேட்டதும், எமேஷனல் ஆன சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நடிகை சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே அவர் நடிப்பில் உருவான 'யசோதா' திரைப்பட ரிலீசின் போது மட்டும் அவர் பேட்டியளித்திருந்த நிலையில், தான் தற்போது மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாக கூறியிருந்தார்.

அதையடுத்து, மேற்கொண்டு சிகிச்சை எடுத்துவந்த சமந்தா, சில நாட்களுக்குமுன், மும்பை விமான நிலையத்தில் வந்திருந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

அதிலும் புத்தாண்டு முதல் புத்துணர்ச்சியோடு தனது பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது 'சகுந்தலா' தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் நடிகை சமந்தா, நடிகர் தேவ் மோகன், இயக்குநர் குணசேகர், தயாரிப்பாளர் நீலிமா குணா மற்றும் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர். சில மாத இடைவெளிக்குப் பிறகு நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவைப் பார்த்ததும், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது இயக்குநர் குணசேகர் 'சாகுந்தலம்' படம் குறித்து பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதுமே, சற்று நேரத்தில் எமோஷனல் ஆகி சமந்தா, கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

பின்னர் பேசிய நடிகை சமந்தா, 'இந்த ஒரு தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். எதிர்பார்த்தபடி படம் ரிலீசாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவே இருக்கும். சில நேரங்களில் சில மாயங்கள் நடக்கும். அப்படித்தான் 'சாகுந்தலம்' படத்திற்கும் நடந்துள்ளது. எத்தனை கஷ்டங்களை சந்தித்த போதிலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com