தீபாவளி அன்று வருகிறார் சர்தார்!

சினி செய்திகள்!
கார்த்தி - ராஷிகண்ணா
கார்த்தி - ராஷிகண்ணா

ராகவ் குமார் 

கார்த்தி - ராஷிகண்ணா - தீபாவளி : வரும் தீபாவளி நாளன்று கார்த்தி நடிக்கும் சர்தார் படம் வெளியாகிறது.      இப்படத்தை மித்ரன் இயக்குகிறார். பொதுவாக படத்தில் காட்டும் உளவாளிகள் கதாபாத்திரம் டிப் டாப் உடையணிந்து ஸ்மார்டாக வருவார்கள்.

சர்தார் படத்தில் கார்த்தி அழுக்காக தாடியுடன் வருகிறார். நம் ஊரில் ஒரு உளவாளி இருந்தால் எப்படி யாரும் கண்டுபிடிக்க முடியாத படி இருப்பார் என்பதை மனதில் வைத்து டைரக்டர் இந்த கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்.   

திரைக் கதைக்காக மட்டும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறார்கள். சர்தாருக்காக  ஒரு நாட்டையே ஊருவாக்கி உள்ளார்கள். பங்களாதேஷ் நாட்டை ஆர்ட் டைரக்ஷன் டீம் உருவாக்கி உள்ளது.

சர்தார்
சர்தார்

கதை 1980 களில் நடப்பதால் ஆடை ட்ரான்ஸ் சிஸ்டர்  ரேடியோ, என சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து செய்து உள்ளார்கள். என்னதான் டிவி, போன் என வந்தாலும் தீபாவளி நாளில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது தனி சந்தோஷம் தான்.                                         

சில வருட இடைவெளிக்கு பின்பு ராஷி கண்ணா மீண்டும் சர்தாரில் நடிக்கிறார். தீபாவளி நாளில் தீபாவளி மத்தா ப்பாக ராஷியை திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்க போகிறது வந்தியதேவன் சர்தாராக வரும் தீபாவளியை வரவேற்க தயாராவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com