நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார்

 சசிகுமாரின் ‘காரி’

நடிகர் சசிகுமார் காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்து விதமான படங்களிலும் நடித்துவரும்  நிலையில் லேட்டஸ்டாக அவர் நடித்திருக்கும் படம்  ‘காரி’.

‘’நடிகர் சசிகுமாரின் படங்களில் வழக்கமாக உள்ள அனைத்து கமர்ஷியல் அம்சங்கள், அதிரடி ஆக்‌ஷன் ஆகியவை இந்த படத்திலும் உண்டு. ஆகவே அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் கொண்டாட்டமாக அமையும்’’ என்கிறார், இந்த படத்தின் அறிமுக இயக்குநரான ஹேமந்த்.

சசிகுமார் - பார்வதி அருண்
சசிகுமார் - பார்வதி அருண்

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் கதாநாயகியாக புதிய வரவான  மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

சசிகுமார்
சசிகுமார்

சசிகுமாருடன் மோதும்  வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி  நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா உடபட பலர் நடித்துள்ளனர்.

எல்லைத் தெய்வமான  காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com