தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்! வேற லெவல்தான்...
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் வெகுவாக கவர்ந்துவருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' திரைப்படம் தீபாவளிக்கு திரையில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'டான்', 'பிரின்ஸ்' திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து 'அயலான்' திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கான CG பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

இப்படத்தை R.D.ராஜா தயாரிக்க, 'நேற்று இன்று நாளை' வெற்றிப்பட இயக்குநரான R.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இது பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ள நிலையில், ஒருவேளை தீபாவளிக்கு 'அயலான்' வெளியாகும் பட்சத்தில், தனுஷின் 'கேப்டன் மில்லர்', கார்த்தியின் 'ஜப்பான்' படங்களுடன் மோதும். இதனால் தீபாவளி ஒரு பெரிய சரவெடியாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.