'தி பெட்டர் லையர்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் ஸ்டார் வார்ஸ் சீக்குவல் நாயகி!

'தி பெட்டர் லையர்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் ஸ்டார் வார்ஸ் சீக்குவல் நாயகி!

அமேஸான் ஸ்டுடியோவுக்காக ஹாலிவுட் நடிகை டெய்ஸி ரிட்லி 'தி பெட்டர் லையர்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார்

தி பெட்டர் லையர் திரைப்படத்தில், நாயகி தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள தனது சகோதரி இறந்து போன பின், இருவருக்கும் பொதுவான பரம்பரை சொத்துரிமைகளைப் பெற தன் சகோதரியைப் போலவே தோற்றமளிக்கக் கூடிய இன்னொரு பெண்ணை வாடகைக்கு அழைத்து வருகிறார். அந்தப் பெண் மூலமாக இறந்து போன தன் சகோதரிக்கும் தனக்கும் பொதுவாக உள்ள சொத்துக்களைத் தான் அடைய நினைக்கிறார்.இது தான் இத்திரைப்படத்தின் கதை.

ஸ்டார் வார்ஸ் சீக்குவல் டிரையாலஜி திரைப்படங்களில் ரே எனும் கதாபாத்திரத்தின் வாயிலாக பிரபலமடைந்தவர் நடிகை டெய்ஸி ரிட்லீ. அந்நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்படவிருக்கும் தி பெட்டர் லையரிலும் முக்கியப் பங்காற்றவிருக்கிறார்.

அமேஸான் ஸ்டுடியோவுக்காக டானென் ஜோன்ஸின் புத்தகமான ‘தி பெட்டர் லையர்’ தொடரைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடருக்கான தயாரிப்பு வேலைகளில் Tornante நிறுவனம் Amazon ஸ்டுடியோக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

டெய்ஸி ரிட்லி, தி பெட்டர் லையருக்கான ஸ்கிரிப்டை எழுதும் ரெயில் டக்கருடன் இணைந்து இத்தொடரின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இவை தவிர மேக்பி மற்றும் தி மார்ஷ் கிங்ஸ் டாட்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் டெய்ஸி இடம்பெறுகிறார்.

Other Articles

No stories found.