தமன்னா டேட்டிங்கா!? யாருடன் தெரியுமா? வெளியான வீடியோ...
பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னா, இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தற்போது அவர் பிரபல நடிகருடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா.
இந்நிலையில், நடிகை தமன்னா, 33 வயதைக் கடந்தும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில், திருமணம் குறித்த கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டும் வருகின்றன. சில நேரங்களில் கிசுகிசுக்களும் கிளம்ப, அதற்கு மறுப்பு தெரிவித்தும் வருகிறார்.

இதைத் தொடர்ந்து, நடிகை தமன்னா, பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல், இருவரும் ஒரு பார்ட்டியில் முத்தத்தை பரிமாறிக்கொள்ள, அந்த காட்சியும் வீடியோவாக வெளியாகி வைரலான நிலையிலும், அப்போதும் அவர்கள் காதல் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா உடன் தற்போது டின்னர் டேட் சென்று இருக்கிறார். அதுகுறித்த வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.