'தளபதி எப்போ ok சொல்லப்போறீங்க?' நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேள்வி!
2017ம் ஆண்டு நிவின் பாலி நடித்த மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்நிலையில், இவர் தற்போது ட்விட்டரில் தளபதி விஜய் குறித்து போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு என திரையுலகில் 20 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமாக அறியப்படுபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2019ல் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், தனுஷின் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறியப்பட்டார்.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் அவர் நடித்திருந்த 'பூங்குழலி' கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் வேளையில், ட்விட்டரிலும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில், 'யூட்யூப் இந்தியா' என்ற ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படத்தை வெளியிட்டு, 'நடிகர் விஜய் உங்களுக்கு போன் செய்தால், அவரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று பதிவிட்டிருந்தனர்.
இந்த பதிவைக் கண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 'ஓய் தளபதி எனக்கு எப்போ ஓகே சொல்ல போறீங்க' என்று அதற்கு ரீட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டானது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதற்கு பலரும், தங்களது நகைச்சுவையான கமெண்ட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.