தீவிர சிகிச்சைக்குப்பின் மாஸ் புகைப்படத்தைப் பகிர்ந்த அருண் விஜய்!
அன்று முதல் இன்று வரை நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்து, முன்னேறி வருபவர் நடிகர் அருண் விஜய். தற்போது 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்து வருகிறார்.
அருண் விஜய் நடிப்பில் ஒவ்வொரு படமும் அவரது வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது 'பார்டர்', 'அச்சம் என்பது இல்லையே', 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்கள் அவரது கைவசம் இருக்கிறது.
இந்நிலையில், பிப்ரவரி 24ம் தேதி 'பார்டர்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத்தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் அப்படத்தின் ஆக்ஷன் நிறைந்த சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும்போது, அருண் விஜய் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருடைய காலில் பயங்கரமான காயம் ஏற்பட்டது.
அவரது காலில் வலி குறையாததால், கேரளாவில் பாரம்பரிய முறைப்படி ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். அங்கேயே சில நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்துவந்த நிலையில், தற்போது உடல்நிலை தேறிய அருண் விஜய், தனது சோசியல் மீடியா பக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஆக்ஷன் காட்சிக்கான ஷூட்டிங் போன்றே தோன்றுகிறது.

அதில், ஒவ்வொரு வெற்றிகரமான ஷாட்டின் பின்னால், நிறைய கடின உழைப்பும் மற்றும் ஒரு சிறந்த குழுவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் நிலை தேறி ஷூட்டிங்கில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என கருத்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.