தமிழில் குறும்படங்கள் நிறைய வரவேண்டும்:இயக்குநர் வசந்த் பேச்சு!
தமிழில் நிறைய குறும்படங்கள் வர வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்த இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைத்துறையின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. இந்திய அரசு வழங்கக்கூடிய இந்த விருது திரைத்துறையினர் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் கொண்ட விருதாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழி திரைப்படங்களை ஆராய்ந்து விருது வழங்கப்படுவதால் அதற்கான போட்டியும் மிகக் கடுமையாக இருக்கும்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது ஆகஸ்ட் 24ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான மூன்று படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தமிழில் வெளியான சிறந்த படமாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்திருந்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது. மேலும் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்த இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ள கருத்து, 2021 ஆண்டு வெளியான படங்களுக்கான போட்டியில் 23 மொழிகளில் இருந்து 158 படங்கள் போட்டியில் பங்கேற்று இருந்தது. 24 கேட்டகிரியில் படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. தமிழில் மூன்று படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழில் நிறைய குறும்படங்கள் எடுக்கப்பட வேண்டும். 128 படங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் 6 மட்டுமே தமிழ் படம் மலையாளத்திலிருந்து 24 படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. என்று தெரிவித்தார்.