ரிலீசுக்கு முன்பே வெளிவந்த வாரிசு பட விமர்சனம்! படத்தைப் பார்த்தது இந்த நடிகர்தான்!

ரிலீசுக்கு முன்பே வெளிவந்த வாரிசு பட விமர்சனம்! படத்தைப் பார்த்தது இந்த நடிகர்தான்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி திரைக்கு வரத் தயாராயிருக்கும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்த நிலையில், பிரபல நடிகருக்கு 'வாரிசு' படத்தை போட்டுக் காண்பித்துள்ளார்.

இயக்குநர் வம்சி, தளபதி விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கிடையே வரும் பொங்கலன்று 'வாரிசு' திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கான ட்ரெயிலர் புத்தாண்டு அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சில வேலைகளின் காரணமாக சற்று காலதாமதமாகி வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை பிரபல நடிகர் ஒருவர் பார்த்துவிட்டு, மிகவும் பாராட்டியுள்ளார்.

தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் அவருக்கென்று ஒரு ரசிகப்பட்டாளத்தை உடையவர் ராம் சரண். இவர் நடித்த 'மகதீரா', 'RRR' படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. அதிலும் 'RRR' திரைப்படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இவர் 'RRR' படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இணைந்து 'RC15' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜுதான் தயாரிக்கிறார். அதன்படியே ராம் சரண் முதல் நபராக 'வாரிசு' திரைப்படத்தைப் பார்த்த நிலையில், அவருடன் தில் ராஜு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் படத்தை பார்த்திருக்கின்றனர்.

படத்தைப் பார்த்து வியந்துபோன ராம்சரண் விஜய்யின் நடிப்பை புகழ்ந்து பாராட்டியதோடு, படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளாராம். அந்த வகையில் ரிலீசுக்கு முன்பே 'வாரிசு' படத்திற்கு ராம்சரண் தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளதே, இப்படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாகவும் அமைந்துள்ளது.

இப்படத்தை தில் ராஜு ராம் சரணுக்கு போட்டு காண்பித்தற்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

ராம்சரன் + சங்கர் கூட்டணி என்பதால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் 'RC15' படம் 170 கோடி செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் தெலுங்கு திரையுலகிலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

அந்தவகையில், இப்படத்திற்குப் பின்னர், ராம்சரணின் கால்ஷீட்டை பெறுவதற்காகவும்தான் தில் ராஜு இப்படி செய்துள்ளதாகவும் தகவல் அறியப்படுகிறது. ஒருவேளை அடுத்த படத்திலேயே இருவரும் மீண்டும் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com