போலீசையே குறிவைத்து படங்கள் எடுப்பதற்கான காரணம் இதுதான்! போட்டுடைத்த வெற்றிமாறன்!

போலீசையே குறிவைத்து படங்கள் எடுப்பதற்கான காரணம் இதுதான்! போட்டுடைத்த வெற்றிமாறன்!

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். இவர் ஒரு படத்தின் கருவை ஆழமாக புரிந்துகொண்டு அது திருப்திகரமானதாக இருந்தால் மட்டுமே அப்படத்தை இயக்கவோ அல்லது தயாரிக்கவோ முற்படுகிறார். இதனாலேயே அவரது படங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் அவர் இயக்கும் படங்களில் பெரும்பாலும் போலீசை தாக்கும் விதத்திலும் கதையம்சம் அமைந்திருக்கும். அந்தவகையில், 'விசாரணை' படம் போலீசின் இன்னொரு முகத்தை வெளிப்படையாக காட்டும்படி அமைந்திருக்கும்.

தற்போது சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படமும் என்கவுண்டர் பற்றியும், போலீசை சுற்றியே கதைக்களமும் அமைவதாகவும் தகவல் அறியப்படுகிறது.

காவல்துறையை மையப்படுத்தியும், அவர்களை தாக்கும் விதத்திலும் வெற்றிமாறனின் பல படங்கள் வருகின்ற வேளையில், சமீபத்தில் வெற்றிமாறனிடம் இதுபற்றி கேட்கபட்டது.

அப்போது, காவல்துறையை மட்டும் மையப்படுத்தி சொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாகவே, மக்கள் மீது ஒரு அமைப்பு ரீதியாக அதிகமாக அடக்கு முறைகள் காவல்துறையினால் நடத்தப்படுகிறது. அதனால்தான் இம்மாதிரி படங்களில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது, தான் இயக்கிவந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் அப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் கூறியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து, வெற்றிமாறன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com