கேரளாவை தெறிக்கவிட்ட 'வாரிசு'!

கேரளாவை தெறிக்கவிட்ட 'வாரிசு'!

தளபதி விஜய் படங்கள் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவிலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்தளவுக்கு கேரளாவிலும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்தவகையில் நேற்று வெளியான 'வாரிசு' திரைப்படம் கேரளாவில் வெளியாகி அஜித்தின் 'வலிமை' பட மொத்த கலெக்ஷனை ஒரே நாளில் முறியடித்துள்ளது.

கேரளா விஜய்யின் கோட்டை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அவருக்கு அங்கு ரசிகப்பட்டாளம் அதிகம். 'சர்கார்', 'மாஸ்டர்', 'பீஸ்ட்' என விஜய்யின் எல்லாப் படங்களும் கேரளாவிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வந்துள்ளது.

விஜய் படங்களுக்கு தமிழகத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல், கேரளாவிலும் விஜய் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கேரள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய்யின் படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று 'வாரிசு', 'துணிவு' இரு படங்களும் கேரளாவில் வெளியான நிலையில் 'துணிவு' ரூ. 1 கோடி வசூலித்துளள நிலையில், வாரிசு ரூ. 4 கோடி வசூலித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், அஜித்தின் 'வலிமை' படம் கேரளாவில் மொத்தமாக ரூ. 2.95 கோடி வசூலித்த நிலையில், ஒரே நாளில் 'வாரிசு' ரூ. 4 கோடி வசூலித்து அதை முறியடித்துள்ளது.

இந்த வசூலானது முந்தைய விஜய் படங்களின் வசூலைக் காட்டிலும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com